Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடே போற்றும் அனுமந்தப்பா : ஒரு பார்வை

நாடே போற்றும் அனுமந்தப்பா : ஒரு பார்வை
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (11:13 IST)
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. அவரின் மறைவினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரின் சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


 

 
காஷ்மீர் மாநிலம் சியாச்சியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பத்து இந்திய வீரர்களைக் புதையுண்டு போனார்கள். அதைத் தொடர்ந்து, ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் அவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
 
இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மைனஸ் 40 டிகிரி குளிரில் 6 நாட்களாக இருந்ததால், அவரது உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்து கோமா நிலையில் இருந்தார்.

webdunia

 

 
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தால், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அவர் உயிர்பிழைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நாடு முழுவதும் ஏராளமானவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

webdunia

 

 
ஆனாலும் அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்ததாலும், நிமோனியா தாக்கியிருந்ததாலும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை 11.45 மணியளவில் நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார்.
 
ஹனுமந்தப்பாவின் மனைவி மஹாதேவி. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பனிச்சரிவில், மற்ற வீரர்களோடு தனது கணவனும் சிக்கியிருந்ததால், அவருக்கு என்ன ஆனதோ என்ற கலக்கத்தில் இருந்த மஹாதேவியும், அவரது குடும்பமும், அவர் உயிருடன் மீட்கப்பட்டார் என்ற தெரிந்ததும், ஆனந்த கண்ணீர் வடித்தனர். உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி ஹனுமந்தப்பா உயிரிழந்துள்ளார்.

webdunia

 

 
லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பாட் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சொந்த ஊரில் தொடக்க கல்வியை முடித்தவர், உயர் கல்விக்காக தினமும் 6 கி.மீ கரடு முரடான பாதையில் நடந்தே பள்ளிக்கு சென்றுள்ளார். அவருக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே பேராசையாக இருந்துள்ளது.
 
அதற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர், ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் போது மூன்று முறை கலந்து கொண்டார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. இருந்தும் மனம் தளராமல் போராடி 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தேர்வாகி மெட்ராஸ் ரெஜிமெண்டின் 19வது பட்டாலியனாக ராணுவத்தில் இணைந்தார்.
 
அவரது 13 ஆண்டு ராணுவ சேவையில், 10 ஆண்டுகள் சவாலான இடங்களில்தான் பணியாற்றினார். காஷ்மீரில் பணிபுரிய விரும்பிய அவர், 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை காஷ்மீரில் பணியாற்றினார். சியாச்சின் முகாமில் பணியாற்ற இவர் கடந்த டிசம்பர் மாதம்தான் தேர்வானார். மைனஸ் 40 டிகிரி வெப்ப நிலையிலும், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசும் பனிக்காற்றிலும் ஹனுமந்தப்பா நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை மரணம் அடைந்தார். பணி நெருக்கடி, விடுமுறை சிக்கல் போன்ற காரணங்களால் அவரது இறப்புக்கு கூட அவரால் வர முடியவில்லை. 
 
ஹனுமந்தப்பா கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு தனது செல்ல மகளோடு சுற்றித் திரிந்து, அவளோடு விளையாடி மகிழ்ந்து, ஏராளமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அவளின் நினைவாகவே ராணுவத்திற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில்தான் பனிபுயலில் சிக்கி பலியாகியுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து அவரது குடும்பம் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஹனுமந்தப்பாவின் இல்லத்தில் கூடியுள்ளனர்.

webdunia

 

 
அவரின் உடல் டெல்லியிலிருந்து விமானம் முலம் கர்நாடக மாநிலம் ஹீப்ளி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெற்றுக்கொண்டார். அதன்பின், அவரது உடல் நேரு அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
பின்னர், அவரின் உடல், அவரது சொந்த ஊரான தார்வாத் மாவட்டத்தில் உள்ள பெட்டடூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. 

webdunia

 

 
அவரின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் “ஹனுமந்தப்பா நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டார். அவருக்குள் இருக்கும் வீரருக்கு என்றும் அழிவில்லை. அவரை போன்ற வீரர் நாட்டுக்காக பணியாற்றியது பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil