Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்! (வீடியோ இணைப்பு)

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்! (வீடியோ இணைப்பு)

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (13:13 IST)
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து பொதுமக்கள் வங்கி வாசலிலேயே காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் வங்கி வாசலில் காத்திருந்த மக்கள் பாஜக எம்பி ஹர்ஷவர்த்தனை அடித்து துவைத்துள்ளனர்.


 
 
பொதுமக்கள் வேலைகளை விட்டுவிட்டு தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற வங்கி வாசலில் நின்று படாத பாடுபடுகின்றனர். இந்த ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
 
நேற்று மட்டுமே பணத்துக்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களில் பெண்கள் உட்பட 3 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். இந்நிலையில் டெல்லியில் நேற்று பாஜக எம்பி ஹர்ஷவர்தன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து ஏதோ கம்மெண்ட் அடித்ததாக கூறப்படுகிறது.

 

 
 
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை கடுமையாக தாக்கினர். பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் தடுத்தும் பொதுமக்கள் அவரை விடாமல் தாக்கினர். அவரின் ஆடைகள் கிழியும் அளவுக்கு அவரை அடித்தனர் மக்கள்.
 
ஒரு கட்டத்தில் அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு பொதுமக்கள் அடிக்க ஒருவழியாக அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவலர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அங்கு வீடியோ எடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments