Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட்

20 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட்
, புதன், 22 ஜூன் 2016 (06:27 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.26 மணிக்கு 20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


 

 
சி34 ராக்கெட், 20 செயற்கைக்கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 செயற்கைக்கோள்களும் அடங்கும். 20 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ ஆகும்.
 
பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட்டானது நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்எல் வகையில் 14- ஆவது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
 
பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட் சுமந்து செல்லவுள்ள முதன்மை செயற்கைக்கோள் கார்ட்டோசாட் 2-ன் முக்கியப் பணி, பூமியை படமெடுத்து அனுப்புதல், கடற்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகும். இந்த செயற்கைகோளானது பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் செயற்கைக்கோளின் எடை 727.5 கிலோ. பூமியிலிருந்து 505 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதில், 986 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். இந்தோனேசியாவின் லெபன்-ஏ3 (120 கி), ஜெர்மனியின் பிரோஸ் (130 கி), கனடாவின் எம்3எம்சாட் (85கி), ஜிஎச்ஜிசாட்-டி (25.5 கி), அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென்2-1 (110கி), டவ் வகையை சேர்ந்த 12 செயற்கைக்கோள்கள் (ஒவ்வொன்றும் 4.7 கி) என 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
 
இந்தியாவின், இந்தியன் பல்கலைக்கழக அகாதெமிக் இன்ஸ்டிடியூட், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சத்யபாம்சாட் (1.5கி), புணே பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஸ்வயம் (1கி) ஆகிய 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் ஜோடியின் சாகச வீடியோ