Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 பெண்கள் மீட்பு

Webdunia
சனி, 29 நவம்பர் 2014 (09:17 IST)
வலுக்கட்டாயமாக  விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 பெண்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
 
பெங்களூரு காவல் துறை ஆணையருக்கு டுவிட்டர் மூலமாக நேற்று ஒரு தகவலை மர்ம நபர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் விவேக் நகர், ஈஜிபுரா பகுதியிலும் விபச்சாரம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், 11 பெண்களை மீட்டு அவர்களை கடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளனர். இதில் 3 பெண்கள் கொல்கத்தாவையும், 3 பேர் ஆந்திராவையும், மூவர் மும்பையையும் மற்ற இருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
 
இதையடுத்து ஆள்கடத்தல், உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments