Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றி மாற்றி புகார்களை அடுக்கும் இந்தியா- சீனா: எல்லை மீறியதால் பரபரப்பு!!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (12:47 IST)
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது. 


 
 
இந்நிலையில், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சீக்கிம் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தான் ஊடுருவி வந்ததாக தெரிவித்துள்ளது.
 
இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இந்திய பக்தர்களை தங்கள் எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று சீன ராணுவம் கூறிவிட்டது. இதனால் இந்திய– சீன எல்லையில் குழப்பம் நிலவியது.
 
இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசி வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments