Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்காகாந்தி சாமி கும்பிட்டபோது 'மோடி வாழ்க' என கோஷம்: மும்பையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (08:35 IST)
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பிரியங்கா சாமி கும்பிட்டபோது அங்கிருந்த பக்தர்கள் 'மோடி வாழ்க' என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்ததும் உண்டு
 
இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பிரியங்கா காந்தி, அங்கு புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். தானே கற்பூரம் ஏற்றி விநாயகருக்கு அவர் தீபாராதனை காட்டினார். பிரியங்கா, சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பாஜகவினர், கோவிலும் முன் கூடி 'மோடி வாழ்க' என கோஷமிட்டனர். பிரியங்கா காந்தி முன்னரே 'மோடி வாழ்க' என பெண்கள் உள்பட பொதுமக்கள் கோஷமிட்டதால் காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஏதும் விபரீதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புக்கு இருந்தனர். 
 
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அங்கு மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் வரும் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments