ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Mahendran
சனி, 23 நவம்பர் 2024 (13:25 IST)
வயநாடு தொகுதியில் கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட தற்போது பிரியங்கா காந்தி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தொகுதியின் "செல்லப் பிள்ளை"யாக அவர் மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
வயநாடு மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா காந்தி 5 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஒரு லட்சத்து நான்காயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் ஒரு லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
இதன் விளைவாக, பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் அவரது வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவர் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments