மாணவர்களுடன் போராட்டத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (18:28 IST)
மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி மாணவர்களோடு பிரியங்கா காந்தியும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களை தாக்கியதை கண்டித்து நாடெங்கிலும் பல பல்கலைகழக மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். டெல்லி இந்தியா கேட் நுழைவாயிலில் போராட்டம் நடத்தி வரும் பிரியங்கா காந்தியுடன் மாணவ அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments