Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வர் வேட்பாளர் ஆகிறார் பிரியங்கா காந்தி! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (23:40 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இனிவரும் சட்டமன்ற தேர்தல்களில் கவனம் செலுத்தவுள்ளது. குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலமான உபியில் வரும் 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் அம்மாநிலத்தில் இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது
 
இதனையடுத்து முதல் நடவடிக்கையாக ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு மட்டுமே பொறுப்பாளராக இருக்கும் பிரியங்கா காந்தியை உபி மாநிலத்தின் பொறுப்பாளர் ஆக்க, காங்கிரஸ் தலைமை திட்டமிட்டிருப்பதாகவும், அடுத்தகட்டமாக உத்திரப் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராகவும் பிரியங்காவை அறிவிக்கலாம் என்றும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது
 
பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் உற்சாகமாக பணியாற்றி வரும் நிலையில் அம்மாநிலத்திற்கு பிரியங்கா காந்தி பதவியேற்றால் உபி மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்றுள்ள சோனியா காந்தி, அந்த பொறுப்பை விரைவில் பிரியங்கா காந்தியிடம் தருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments