Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தி பிறந்தநாள் இன்று! காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (09:55 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி இன்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி தற்போதைய காங்கிரஸின் முக்கியமான முகங்களில் ஒருவராக இருக்கிறார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த தலைவராக பிரியங்கா காந்தி வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழும் அளவுக்கு அவர் மீதான நம்பிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.

ராகுல் காந்தியை போல இல்லாமல் அவரின் பாட்டி இந்திரா காந்தியை போல ஆவேசமான பதில்களை அளித்து வரும் பிரியங்கா காந்தி, இன்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காங்கிரஸ் கட்சி இன்று அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கு அதன் மூத்த தலைவர்களின் ஊழலே காரணம் என சொல்லப்படும் நிலையில் பிரியங்கா காந்தி போன்ற இளம் தலைவர்கள் காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு வித்திடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞரின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் ஊசிகளை அடித்த கணவன் - மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அதிமுக வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது: ஜெயக்குமார்

விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்துள்ளனர்: விஜய பிரபாகரன்

ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments