Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் சலுகை ; அடுத்த வாரமே அறிக்கை தாக்கல் ; சசிகலாவிற்கு சிக்கல்?

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (17:38 IST)
பெங்களூர் சிறையில் சசிகலா உட்பட சிலருக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், அடுத்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று பரபரப்பு புகார் அளித்தார். 
 
இதனையடுத்து, இதுபற்றி விசாரணை செய்ய கர்நாடக உள்துறை முன்னாள் ஐஏஸ் அதிகாரி வினய்குமாரை, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமய்யா நியமித்தார்.
 
இந்நிலையில், இந்த விசாரணை குறித்த முதல் கட்ட அறிக்கையை, அடுத்த வாரமே வினய்குமார் தாக்கல் செய்வார் எனவும் முழு விசாரணை ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கல் செய்வார் எனவும்  சித்தராமய்யா அறிவித்துள்ளார். 
 
அடுத்த வாரம் இந்த அறிக்கை வெளியாவதால், சசிகலாவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments