Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசோடியா மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, சிறையில் அடைக்க பிரதமர் திட்டம்- முதல்வர் கெஜ்ரிவால்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (21:58 IST)
மணீஸ் சிசோடியா மீது பொய்யான வழக்குகளைப் போட்டு அவரைச் சிறையில் இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து, முன்னாள் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவை  சிபிஐ காவலில் விசாரிக்க வேண்டுமென சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  2015 ஆம் ஆண்டு டெல்லி பீட்பேக் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கியதாகவும், இந்த அமைப்பு ஏற்படுத்தி தகவல் சேகரித்தது தொடர்பாக, அரசுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்லதாகவும் குற்றம்சாட்டி, மணீஸ் சிசோடியா உட்பட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு புதிய வழக்கைப்பதிவு செய்துள்ளது சிபிஐ.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீத், சொத்துக்குவிப்பு, போலி ஆவணம் தயாரித்தல், அவற்றை ஏமாற்றும் நோக்கத்திற்குப் பயன்படுத்துதல், ப ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவால் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், மணீஸ் சிசோடியா மீது சிபியை பொய்யான வழக்குகளைப்போட்டு அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்கும்படி பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சோகம் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments