Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (08:55 IST)
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 26 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்.
 
இதற்காக 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்படுகிறார். பகல் 1.30 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
 
பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலை 5.25 மணிக்கு சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து சேருகிறார்.
 
சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. மாலை 5.40 மணிக்கு டெல்லிக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.
 
ஜனாதிபதி வருகையையொட்டி டெல்லி சிறப்பு படையினர் நேற்று சென்னை வந்தனர். பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டனர்.
 
பிரணாப் முகர்ஜியின் வருகையையொட்டி விமான நிலையத்தில் 26 ஆம் தேதி இரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகனங்கள், பயணிகள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments