Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் இணைகின்றாரா பிரசாந்த் கிஷோர்?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:07 IST)
தேர்தல் வியூகத்தில் மன்னன் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கு சமீபத்தில் வெற்றியைத் தேடித்தந்தவர் பிரசாந்த் கிஷோர். மூவரையும் முதல்வராகிய பிரசாந்த் கிஷோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக்க தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து நீண்ட நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்து உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் காங்கிரஸில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பது குறித்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியை மேலும் வலுப்படுத்தும் திட்டம் பிரசாந்த் கிஷோருக்கு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments