பிரனாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை தகவல்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (18:11 IST)
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு வெண்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments