Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியால் சுட்டவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் – பாஜகவை கேலி செய்த பிரகாஷ்ராஜ் !

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (16:27 IST)
பிரகாஷ் ராஜ்

இன்று அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது.

இன்று காலைமுதல் அறிவிக்கப்பட்டு வரும் டெல்லி தேர்தலுக்கான முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் வந்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களைத் தேர்தலுக்குப் பின் நடந்துள்ள அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜகவின் தோல்வியை நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டிவிட்டரில் ‘குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மக்களை துப்பாக்கியை விட்டு சுடச் சொன்னவர்களை இப்போது மக்கள் துடைப்பத்தால் (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) அடித்து விரட்டி இருக்கிறார்கள்.’ எனப் பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பிரகாஷ் ராஜ் பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments