Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வீடியோ புகார்..! தேவகவுடாவின் பேரன் மீது வழக்குப்பதிவு..!

Senthil Velan
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (16:31 IST)
ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா  மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி நாடாளுமன்ற  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சரும், ஜே.டி-எஸ் தலைவருமான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸின் ஷ்ரேயாஸ் எம்.படேலை எதிர்த்துப் போட்டியிட்டார். கர்நாடகாவில் ஜே.டி(எஸ்) பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது.
 
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார்.
 
அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார். இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

ALSO READ: சொம்பு ஏந்தி கர்நாடக முதல்வர் போராட்டம்.! நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்..!

இந்நிலையில் தலைமறைவான பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்கு பிரிவுகளின் கீழ் கர்நாடகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்