Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை தகுதிநீக்கம் செய்ய யூபிஎஸ்இ-க்கு அதிகாரம் இல்லை: பூகா கேத்கர்..!

Mahendran
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:29 IST)
என்னை தகுதி நீக்கம் செய்ய யுபிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் சான்றிதழ் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
போலி ஓபிசி சான்றிதழ், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், பெயர் மாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக ஐஏஎஸ் பதவியில் இருந்து பூஜா கேத்கர் நீக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.   யுபிஎஸ்சி தேர்வுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்க வைக்கும் வகையில் பூஜா கேத்கர் நடவடிக்கை இருந்ததாக யுபிஎஸ்சி தரப்பில் நீதிமன்றம் கருத்து தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தது.
 
 இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட என்னை தகுதி நீக்கம் செய்ய யூபிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை என்று பூஜா கேத்கர் வாதிட்டார்.  மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மட்டுமே சட்டப்படி தன் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் நான் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் குடும்ப பெயரிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் பயோமெட்ரிக் தரவுகளை யுபிஎஸ்சி சரி பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து செப்டம்பர் 5ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். அதுவரை பூஜா கேத்கரை கைது செய்ய காவல்துறைக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பெற்றுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments