Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு: குஜராத் தேர்தலில் குளறுபடி!!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (16:29 IST)
குஜராத்தில் இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்து வரும் 14 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  
 
இரண்டு கட்ட வாக்குபதிவு முடிந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,689 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், சூரத், ராஜ்கோட் மற்றும் கொசம்பா பகுதிகளில் வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதே போல் மேலும் சில இடங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரமும் பழுதடைந்தாக கூறப்படுகிறது. 
 
இதனால், பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வேறு இயந்திரங்கள் விரைவாக மாற்றப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 2 மணி வரை மொத்தம் 35.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments