Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கணவரை டிரைவர் என கூறுவதா? இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்த போலந்து பெண்..!

Mahendran
செவ்வாய், 27 மே 2025 (11:15 IST)
போலந்து நாட்டை சேர்ந்த காப்ரியலா என்ற பெண், இந்திய நபரான ஹர்திக் வர்மாவை திருமணம் செய்திருக்கிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவில், இந்தியாவின் பல பகுதிகளில் நாங்கள் இருவரும் ஜோடியாக பயணிக்கும் போதே, தன்னுடைய கணவரை பலர் டூர் வழிகாட்டி அல்லது டிரைவராகவே பார்ப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.
 
"இந்தியாவில் புதிய இடம் ஒன்றுக்கு போனாலே, இது நடந்தே தீரும். ஹர்திக் என் டூர் கைடு, சில சமயம் டிரைவரா? என்றும் பலர் கேள்வி கேட்கின்றனர். நியாயமா இது? நாங்கள் கைகளைப் பிடித்து, நிமிஷத்திற்கு நூறு போட்டோக்கள் எடுக்கிறோம். இது ஒரு டிரைவருடன் நடக்குமா?" எனக் கேட்டார்.
 
மேலும் இந்தியர்கள் இன, கலாசார வேறுபாடுகளை கொண்ட தம்பதிகள் தொடர்பான பழைய மனப்பாடுகளிலிருந்து மக்கள் வெளிவர வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
 
அவரது பதிவு விரைவில் வைரலாக, பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஒருவர், "மீண்டும் திருமணம் செய்து ஒரு பேரணியை நடத்துங்கள்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
 
மற்றொருவர், "உண்மையை ஏற்க மறுக்கும் மனிதர்கள், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தாங்கள் எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்தனர்.
 
மூன்றாவது ஒருவர், "அனைத்து கணவர்களுமே தங்களுடைய மனைவிக்கும்  டிரைவர்தான்!" என எழுதினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பரிதாப பலி..!

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments