Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெப்பர் ஸ்ப்ரேவுக்கு பதில் கெமிக்கல் ஸ்ப்ரே? போலீசாரின் அத்துமீறலால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (07:01 IST)
பெப்பர் ஸ்ப்ரேவுக்கு பதில் கெமிக்கல் ஸ்ப்ரே?
சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து போலீசார் கூட்டத்தை கலைத்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் அடித்தது பெப்பர் ஸ்ப்ரே அல்லது கெமிக்கல் ஸ்ப்ரே என்ற தகவல் தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் டெல்லியில் நடந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்து கூட்டத்தை கலைத்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் பயன்படுத்தியது உண்மையில் பெப்பர் ஸ்ப்ரே அல்ல என்றும் அது கெமிக்கல்ஸ் ஸ்ப்ரே என்றும் இந்த கெமிக்கல் ஸ்ப்ரேயால் மனிதர்களின் உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் டாக்டர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். பெப்பர் ஸ்ப்ரே அடித்தால் சில நிமிடங்கள் கண் எரிச்சல் தரும் ஆனால் அதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் கெமிக்கல் ஸ்ப்ரே உடலுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
 
மேலும் தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை செய்தபோது கெமிக்கல்ஸ் ஸ்ப்ரேயால் அவர்களுக்கு வயிற்றுவலி உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது மிகக் கொடூரமானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசார் இதற்கு இதுவரை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய விசிகவினர்.. அண்ணாமலை கண்டனம்..!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்: 11 புறநகர் ரயில்கள் ரத்து

ரூ.30,000 கோடி கூகுளுக்கு அபராதம்.. ரத்து செய்யாவிட்டால் நடவடிக்கை என டிரம்ப் எச்சரிக்கை..!

8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments