Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப்பில் ராஜினாமா தகவலை அனுப்பிய காவல்துறை துணை ஆய்வாளர்

Webdunia
வியாழன், 7 மே 2015 (07:23 IST)
முதன்முறையாக, உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் தனது ராஜினாமாவை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
 
இது குறித்து கான்பூர் மண்டல ஐ.ஜி.யின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், "மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல் மற்றும் அவமானப்படுத்தும் விசயங்களால் ரசூலாபாத் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட வினோத் குமார் என்ற காவல்துறை துணை ஆய்வாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் " என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து விசாரணை செய்து, 24 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கான்பூர் தெஹாத் மாவட்ட சூப்பிரெண்டு சபாராஜிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி. கூறியுள்ளார்.
 
மேலும், இதுபோன்ற சமூக வலைதளத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்துள்ளார்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments