Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி: மாலை மரியாதையுடன் அனுப்பி வைத்த மருத்துவர்கள்

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (17:47 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பதில் மருத்துவர்களை அடுத்து காவல் துறையினர் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியால் காவல்துறையினர் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணி வழங்கப்பட்டது. இந்த பணியில் அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்துக்கு மேல் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கடந்த சில வாரங்களாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் அவரது உடல்நிலை வெகு வேகமாக முன்னேற்றம் அடைந்து தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டார். இதனையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பொது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி பேண்ட் வாத்திய குழுவினர் வரவழைக்கப்பட்டு பேண்ட் இசையுடன் அவருக்கு வழியனுப்பு விழா நடத்தி வைக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அந்த காவல் துறை அதிகாரி விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments