Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடுக்காததால் கூலித் தொழிலாளிகள் அடித்துக் கொலை : போலீசார் வெறிச்செயல்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (15:53 IST)
தாங்கள் கேட்ட லஞ்ச பணத்தை தர மறுத்த 2 கூலித் தொழிலாளிகளை, போலீசார் அடித்தே கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலமான மணிப்பூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சம்பவத்தன்று மணிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 கூலித் தொழிலாளிகளிடம் கூலி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
 
ஆனால், அவர்கள் அந்த பணத்தை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காவலர்கள் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.  இதில் இரண்டு பேர் அங்கேயே இறந்துவிட்டனர்.
 
இந்த விவகாரம் வெளியே தெரிய வரவும்,பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்த பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments