Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்க்ரீமில் இருந்த மனித விரல் யாருடையது: தடயவியல் சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (14:55 IST)
சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஐஸ்கிரீம் வாங்கிய பெண் ஒருவர் ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் தற்போது அந்த ஐஸ்கிரீம் ஆலையில் பணிபுரிந்த ஊழியரின் விரல் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மும்பை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதை திறந்து பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இதனை அடுத்து அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்கிரீம் ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விபத்தில் ஒரு ஊழியர் விரலை இழந்ததாகவும் அந்த விரல் தான் ஐஸ்கிரீமில் வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் டிஎன்ஏ சோதனைக்கு விரல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டால் ஐஸ்கிரீம் ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments