காவலரை கொன்ற பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2018 (10:27 IST)
ஜம்மு காஷ்மீரில் போலீஸ்காரரை கொன்ற பயங்கரவாதிகளில் 3 பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
ஜம்முகாஷ்மீரில் முகம்மது சலீம் என்பவர் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவரின் அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சலீம் விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பயங்கரவாதிகள் சிலர் கடத்தி படுகொலை செய்தனர். இதனால் சலீம் குடும்பத்தினரும் காவல் துறையினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த ராணுவத்தினர் அவர்களில் 3 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments