Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் நரேந்திர மோடி

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் நரேந்திர மோடி
, சனி, 25 ஏப்ரல் 2015 (11:34 IST)
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் இன்று திடீரென பயணம் செய்தார்.



 

 
பிரதமர் நரேந்திர மோடி, இன்று தவுலாகன் பகுதியில் இருந்து துவார்க்காவிற்கு  மெட்ரோ ரயிலில் சென்றார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பயணம் செய்தார். 
 
இந்நிலையில், தனது பயணம் குறித்து டிவிட்டரில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ள நரேந்திர மோடி, "மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

டெல்லி மெட்ரோ ரயில் திட்ட தலைவர் ஸ்ரீதரன் மெட்ரோ ரயிலில் பயணம் அனுபவம் குறித்து என்னிடம் கூறி வந்தார்.  டெல்லி மெட்ரோ ரயிலுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil