Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

Webdunia
புதன், 12 நவம்பர் 2014 (14:58 IST)
ட்விட்டரைத் தொடர்ந்து புகைப்படங்களைப் பகிர உதவும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.
ஆசியான், கிழக்காசிய மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை நேற்று(செவ்வாய்க்கிழமை) துவங்கினார். இந்த நிலையில் 25-வது ஆசிய உச்சி மாநாட்டின் மாபெரும் விளம்பரப்பலகையை தனது செல்போன் வழியாக புகைப்படம் எடுத்து அதனை பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
தற்போது மியான்மர் நாட்டில் இருக்கும் நரேந்திர மோடி அங்கிருந்து தனது செல்போனில் அவரே எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி புகைப்படத்தை பகிர்ந்து அடுத்த 13 நிமிடங்களில் அவரது பகிர்வை 35,000 பேர் தொடர ஆரம்பித்தனர். அவரது படத்துக்கு மட்டும் 2,537 விருப்பங்கள் வந்துள்ளன.
 
தான் இன்ஸ்டாகிராமில் இணைந்ததை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி சுமார் 80 லட்சம் ஆதரவாளர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments