Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் வாழ்த்து கூறி பல்பு வாங்கிய பிதமர் மோடி

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (15:22 IST)
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு நேரிலேயே சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆச்சரியப்படுத்தியவர் பிரதமர் மோடி. இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.


 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி-க்கு பிரதமர் மோடி இன்று பிறந்த நாள் வாழ்த்து கூறி பல்பு வாங்கி கொண்டார். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஷ்ராஃப் கானி. உங்களுக்கு நீடிய வாழக்கை மற்றும் உங்கள் வாழ்க்கை நல்ல உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியாக அமைய பிராத்திக்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து கூறினார்.


 
 
அதற்கு பதில் அளித்த ஆப்கானிஸ்தான் அதிபர் தனக்கு இன்று பிறந்த நாள் இல்லை, தன்னுடைய பிறந்த நாள் மே 19 ஆம் தேதி என கூறினார். எனினும் உங்களுடைய அன்பான வார்த்தைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் அவர்.
 
கூகுள் தகவலில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ராஃப் கானியின் பிறந்த நாள் பிப்ரவரி 13 என்று தான் உள்ளது அதன் அடிப்படையிலேயே பிரதமர் அவருக்கு வாழ்த்து கூறினார் என ஒருவர் அந்த டுவிட்டில் கூறியிருந்தார்.


 
 
அதற்கு பதிலளித்த இன்னொருவர் அப்படியென்றால் பிரதமர் மோடி கூகுள் தகவல் தேடலின் மூலமாக தான் வாழ்த்து கூறுகிறாரா?. நான், அவர் யாருடன் எல்லாம் தனிப்பட்ட முறையிலான தொடர்பில் இருக்கிறாரோ அவர்களுக்கு தான் வாழ்த்து கூறுகிறார் என பதிலளித்தார். இப்படி பல பேர் பிரதமர் மோடியின் டுவிட்டர் வாழ்த்தில் பதிலளித்து வருகின்றனர்.
 
நல்ல வேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு கொடுத்த மாதிரி ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து கூறவில்லை மோடி. கூறியிருந்தால் மோடிக்கு அவரது பதில் சர்ப்ரைசாக இருந்திருக்கும்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments