இந்தியாவுக்கு இதைவிட சிறப்பான துவக்கம் இருக்காது! – பிரதமர் மோடி பெருமிதம்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (13:23 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இரண்டாம் இடத்தை அடைந்து வெள்ளி பதக்கத்தை தட்டியுள்ளார்.

இதுகுறித்து வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இதை விட சிறந்த தொடக்கம் இருக்க முடியாது. மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்களை ஊக்கப்படுத்தும். மீராபாயின் வெற்றி இந்தியாவிற்கு ஒரு பிராகசமான தொடக்கம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்? வானிலை எச்சரிக்கை..!

பெங்களூரு-ஓசூர் மெட்ரோ இணைப்பு திட்டம் சாத்தியமில்லை.. கைவிரித்த கர்நாடக அரசு..!

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments