Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று சொந்த தொகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (07:37 IST)
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்று அவர் தனது சொந்த தொகுதிக்கு செல்ல உள்ளார் 
 
வாரணாசி தொகுதியில் உள்ள மிர்சாமுரத் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்ற இருப்பதாகவும் அதன் பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாண்டியா - ராஜதலாப்  இடையே 2447 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு வழி சாலையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு ஆய்வு பணிகளை பார்வையிட உள்ளதாகவும் கார்த்திகை பூர்ணிமா திருவிழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் அங்கு 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் பிரம்மாண்டமான விழாவை அவர் கண்டு ரசிக்க உள்ளதாகவும் அதன் பின் இரவில் நடைபெறும் ஒலி ஒளி காட்சியை பார்வையிட்ட பின்னர் இரவு டெல்லி திரும்புவதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments