Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பறக்கும் படம் போலி: பகீர் தகவல் தரும் சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:09 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் தேஜஸ் விமானத்தில் பறந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அந்த புகைப்படமே போலி என சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சமீபத்தில் பெங்களூரை தளமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அதன்பின் தேஜஸ் போர் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார்.

மணிக்கு 1975 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானத்தில் வாஜ்பாயை அடுத்து மோடி தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  இது குறித்து  சுப்பிரமணியன்   சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ஏர்போர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

25 ஆயிரம் அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்போர்ஸ் ஜெட் விமானம் பறக்க முடியாது என்றும் எனவே பிரதமர் மோடியின் அந்த படம் போலியானது என்றும் அவர் தெரிவித்தார்.  இதற்கு பிரதமர் அலுவலகம் என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments