காங். எம்.பி.யை புகழ்ந்து பேசி கண்ணீர் சிந்திய பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:49 IST)
காங். எம்.பி.யை புகழ்ந்து பேசி கண்ணீர் சிந்திய பிரதமர் மோடி!
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி ஒருவரை புகழ்ந்து பேசிய போது பிரதமர் மோடியின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மாநிலங்களவை சமீபத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி குலாம்நபி ஆசாத் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து குலாம் நபி ஆசாத் குறித்து பேசிய பிரதமர் மோடி குலாம்நபி ஆசாத் அவர்கள் சிறந்த மனிதர் என்றும், அவருக்கு எப்போதும் கர்வம் என்பது இருந்ததே இல்லை என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து சில நிமிடங்கள் பேசினார்.
 
அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது அவரது கண்களில் கண்ணீர் வழிந்ததை அடுத்து அதை அவர் துடைத்துக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத் மாநிலங்களவை பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் அவரை புகழ்ந்து பேசிய போது கண்ணீர் சிந்திய மோடியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments