அனுமன் கோவிலில் தீப ஆராதனை செய்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:57 IST)
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி அனுமன் கர்கி கோவிலில் தானே பூஜைகளை மேற்கொண்டுள்ளார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக தற்போது அயோத்தி வந்தடைந்துள்ள பிரதமர் மோடி முதலாவதாக அங்குள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த அனுமன் கர்கி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள அனுமன் சிலைக்கு தானே தீபம் ஏற்றி வழிப்பட்ட பிரதமர் மோடியை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று அவருக்கு பட்டு துணி அணிவித்து மரியாதை செய்தனர். பிறகு கோவிலை சுற்றி வந்த பிரதமர் தற்போது ராமர் கோவில் பூஜைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments