Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

Senthil Velan
திங்கள், 8 ஜூலை 2024 (13:32 IST)
இந்தியா – ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். 
 
கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
 
கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு அவர் புறப்பட்டு சென்றார்.   இந்த பயணத்தின் போது பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு மதிய விருந்து அளிக்க உள்ளார்.

ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டரை சந்தித்து பேசுகிறார்.  41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார். 

ALSO READ: சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்.! புதிய ஆணையராக அருண் நியமனம்..!!

இந்நிலையில் ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது தொடர்பாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அடுத்த மூன்று நாட்களில், ரஷியா மற்றும் ஆஸ்திரியாவில் இருப்பேன். இந்தியா காலப்போக்கில் நட்புறவை சோதித்துள்ள இந்த நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணங்கள் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் தொடர்பு கொள்வதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

அஜர்பைஜான் விமானத்தை தாக்கியது ரஷ்ய ஏவுகணையா? - ரஷ்யா அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments