முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை: கட்டுப்பாடுகள் அதிகரிப்பா? ஊரடங்கா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (06:59 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவின் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று 12 மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா  வைரஸ் அதிகம் பரவி வரும் மாநிலங்களின் முதல்வர்களுடன் மட்டும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார் 
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் போன்ற அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கொரோனா நோயை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னர் முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பகல் நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments