Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பிறந்த நாளை வேலையில்லா திண்டாட்ட நாளாக அறிவித்த காங்கிரஸ்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:17 IST)
பிரதமர் மோடி இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்தநாளை வேலை இல்லா திண்டாட்டம் நாளாக அனுசரிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமரின் பிறந்தநாள் தேசிய வேலையில்லா திண்டாட்ட நாள் என்றும், கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலையை பறித்த பிரதமருக்கு, அவருடைய பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்ட நாளாகக் கொண்டாடுவது மிக பொருத்தமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது 
 
இதுகுறித்து தான் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியபோது வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் 32 லட்சம் பேர் வேலையை இழந்து தவிக்கின்றனர். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. பிரதமர் மோடியால் பெரு முதலாளிகள்தான் மேலும் செல்வங்களை பெருகி வருகின்றனர். இந்திய நாட்டு இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை குறிப்பதற்காகவே அவரது பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்டம் நாளாக அறிவித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments