Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானிக்கு கொரோனா… நடுவானில் தெரிந்த உண்மை – பயணிகள் தவிப்பு!

Webdunia
சனி, 30 மே 2020 (16:43 IST)
ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக மாஸ்கோ சென்ற விமானத்தின் விமானிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து விமானம் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துவர வந்தே பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானமமான ஏ-320 நியோ விமானம் மாஸ்கோவுக்கு டெல்லியிலிருந்து இன்று புறப்பட்டது. ஆனால் அதில் சென்ற விமானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து உஸ்பெகிஸ்தான் வரை சென்ற விமானம் மீண்டும் இந்தியாவுக்கே வர உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட விமானியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த விமானக் குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாஸ்கோவில் இருக்கும் இந்தியர்களை மீட்க வேறு விமானம் அனுப்பப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments