Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்டத்தில் பிரபல நடிகர்: கைது செய்யப்படுவாரா?

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (20:39 IST)
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் சூதாட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சமீபத்தில் முடிந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரிலும் சூதாட்டம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சமீபத்தில் மும்பை போலீசார் ஐபிஎல் சூதாட்டத்தை நடத்திய புக்கிகளில் ஒருவரை கைது செய்தனர். சோனு ஜலான் என்ற அந்த புக்கியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் பல பிரபலங்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், அவர்களில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அர்பாஸ்கான் என்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மும்பை போலீசார் நடிகர் அர்பாஸ்கானுக்கு நாளை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் சூதாட்ட புக்கிகளுடன் அர்பாஸ்கான் இருந்த புகைப்படங்கள் ஆதாரங்கள் இருப்பதால் நாளை விசாரணையின் முடிவில் அர்பாஸ்கான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments