Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: ரூ.100ஐ நோக்கி செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (07:09 IST)
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் இந்த விலையேற்றம் இருப்பதாக கூறப்பட்டாலும், விலை மதிப்பு உயர்ந்தால் மீண்டும் இந்த அளவுக்கு பெட்ரோல் ,டீசல் விலை இறங்காது என்பதே அனைவரின் கவலையாக உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் இன்றைய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒருசில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments