Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு...பேட்டரி ஸ்கூட்டரில் பேரணி சென்ற முதல்வர்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:44 IST)
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று பேட்டரி ஸ்கூட்டரில் பேரணி சென்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கப்போவதில்லை என பாஜக அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே மாநில, மத்திய அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில்60 % மாகவும், டீசல் விற்பனையில் 54 % மாகவும் உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறிக் கடுமையாகத் தனது விமர்சித்துவரும் நிலையில், இந்தப் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று பேட்டரி ஸ்கூட்டரில் பேரணி சென்றார். இதுகுறித்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments