Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலைக் குறைவு – மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:29 IST)
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிகக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது. கிட்டத்தட்ட பெட்ரோல் விலை 90 ருபாயை நெருங்கியது. டீசல் விலை 85 ரூ வை நெருங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். இதனால் லாரிகளின் வாடகையும் உயர்ந்தது. இன்னும் சில அத்யாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. தற்போது எட்டு மாதங்க ளுக்கு முன்பிருந்த விலை யில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகின்றன.

கடந்த வாரங்களில் 12 ரூபாய் வரைக் குறைந்து சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ. 74.41-க்கும், டீசல் 70.09-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments