Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்
, செவ்வாய், 30 ஜூன் 2015 (21:03 IST)
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
 
அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. டெல்லி நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும் டீசலின் விலையில் 71 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil