Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை ரூ.10 குறையவுள்ளதாக தகவல்.. தேர்தல் தான் காரணமா?

Siva
வியாழன், 18 ஜனவரி 2024 (11:01 IST)
கிட்டத்தட்ட 500 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை 10 ரூபாய் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. 
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை மக்களுக்கு பயன்பாடும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில்  நாடாளுமன்ற தேர்தல் வரயிறுப்பதால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு ஒரு நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments