Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்
, வியாழன், 17 நவம்பர் 2016 (16:26 IST)
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை, வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர்.


 

 
ஆனால், ஏ.டி.எம்-ல் ஒரு அட்டைக்கு ரூ.2000, அதிகபட்சம் 2,500 மட்டுமே எடுக்க முடியும். அதேபோல், வங்கிகளில் பழைய நோட்டுகள் ரூ.4000 வரை மாற்ற முடியும் என்ற நிலை மாறி, தற்போது 2000 வரை மட்டுமே மாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால், சிறு வணிகர்கள், மருத்து செலவுக்கு பணம் தேவைப்படுபவர்கள், திருமணம் வீட்டார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகந்த தாஸ், திருமண செலவிற்கு 2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தார்.
 
அதுபற்றி கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி “பழைய நோட்டுகளை மாற்றுவது 4,500 ரூபாயில் இருந்து, ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் மக்கள் தவறாக பணத்தை தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். அதேபோல், திருமண வீட்டாருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகையால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் ” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் விற்பனைக்கு வந்த 2000 ரூபாய் நோட்டு