பாபா ராம்தேவின் புதிய சிம்கார்டு: ஜியோவுக்கு போட்டியா?

Webdunia
திங்கள், 28 மே 2018 (18:46 IST)
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்த போட்டியில் ஏர்செல் நிறுவனம் நஷ்டத்தால் வெளியேறிவிட்டது.
 
இந்த நிலையில் ஜியோவுக்கு கடுமையாக போட்டி தரும் வகையில் பதஞ்சலி நிறுவனம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம்கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதேசி சம்ரித்தி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில் ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகளை பெற்று கொள்ளலாம். 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்பதோடு 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். மேலும் இந்த சிம்கார்டை வாங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வசதியும் உண்டு.
 
ஆனால் இந்த சிம்கார்டு தற்போதைக்கு பதஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இருப்பினும் வெகுவிரைவில் பொதுமக்களுக்கும் இந்த சிம் கிடைக்கும் என்றும் அவ்வாறு பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் போது இந்த சிம்கார்டை வாங்குபவர்களுக்கு பதஞ்சலி தயாரிப்புகளில் 10% சலுகை வசதியும் தரப்படும் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments