Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீல்ஸ் ரூ.500, நான்வெஜ் மீல்ஸ் ரூ.700: நாடாளுமன்ற கேண்டீன் புதிய விலைப்பட்டியல்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (20:48 IST)
மீல்ஸ் ரூ.500, நான்வெஜ் மீல்ஸ் ரூ.700: நாடாளுமன்ற கேண்டீன் புதிய விலைப்பட்டியல்!
நாடாளுமன்ற கேன்டீனில் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு என கிடைத்துக் கொண்டிருந்த உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சமீபத்தில் மானிய விலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதை நிறுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது நாடாளுமன்ற கேன்டீனில் உள்ள புதிய விலை பட்டியல் வெளியாகியுள்ளது 
 
இந்த விலை பட்டியலின்படி ஒரு சமோசாவின் விலை 10 ரூபாய், தோசையின் விலை 60 ரூபாய், இரண்டு இட்லிகளின் விலை 25 ரூபாய், மதிய உணவு வெஜ் என்றால் 500 ரூபாய், நான்வெஜ் என்றால் 700 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் மட்டன் பிரியாணி 150 ரூபாய், சிக்கன் பிரியாணி 100 ரூபாய், தக்காளி சாதம் விலை 50, ரூபாய் லெமன் சாதம் விலை 30 ரூபாய் என விலை பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த விலையை விட பல மடங்கு தற்போது விலை உயர்த்தப்பட்ட இருந்தாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments