Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழும விவகாரம்: எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தால் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (13:56 IST)
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் கூச்சல் குழப்பம் செய்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தின் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி எம்பிகள் அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் மக்களவைஒத்திவைக்கப்பட்டது 
 
அதேபோல் மாநிலங்களவையிலும் அதானி குழும பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என எம்பிக்கள் முழக்கம் பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பம் மற்றும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments