Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக: சிக்கினார் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக: சிக்கினார் சிதம்பரம்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (13:40 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்சல் மாக்சிஸ் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முடக்கினர். ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரதுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.


 
 
அதிமுக உறுப்பினர்களின் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நண்பகலுக்கு முன் முதல் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
 
மக்களவை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள், “ நடவடிக்கை எடுக்க வேண்டும்” , “ ஏர்சல் மேக்சிஸ் ஏன் தமதம் ஏன் தாமதம்” என கோஷங்கள் எழுப்பி தேசிய ஜனநாயகக் கூட்டணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
 
அதிமுக உறுப்பினர்கள் தங்கள் கைகளில் ஒரு ஆங்கில தினசரி பத்திரிக்கையை காட்டி அதில் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரி அதிகாரிகளின் விசாரணை படி உலக முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர் என கூறப்புட்டுள்ளது என்றனர்.
 
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று கேள்வி நேரத்தின் போது இது பற்றி விவாதிக்கலாம் என கூறி பத்து நிமிடம் அவையை ஒத்தி வைத்தார். உடனே அதிமுக உறுப்பினர்கள் செய்தித்தாள் பிரதிகளை பாஜக உறுப்பினர்களுக்கு வினியோகித்தனர்.
 
அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களைவை துணை சபாநாயகர் தம்பி துரையை சந்தித்து பேசினார்.
 
அவை மீண்டும் கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் கோஷங்களை எழுப்பினர். முறையாக அறிவிப்பு கொடுத்தால் இது குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Show comments