Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸொமாட்டோ ஊழியருக்கு நீதி கிடைக்க வேண்டும்! – பிரபல இந்தி நடிகை ட்வீட்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (11:32 IST)
பெங்களூரு ஸொமாட்டோ ஊழியர் கைது விவகாரத்தில் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெங்களூரில் உணவு டெலிவரி செய்ய வந்த ஸொமாட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாக பெண் வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதுடன், வேலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுதொடர்பாக அந்த டெலிவரி பாயிடம் போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சிக்குரிய வேறு சில விஷயங்கள் தெரிய வந்தன. புகார் அளித்த பெண் ஆர்டர் செய்த உணவுக்கு பணம் தராமல் தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அவர் அடிக்க வந்தபோது டெலிவரி பாய் தடுத்தபோது பெண்ணின் கையில் இருந்த மோதிரம் மூக்கில் சிராய்த்து அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஸொமாட்டோ டெலிவரி நபருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை பரினீதி சோப்ரா “பெங்களூருவில் சொமோட்டோ ஊழியர் மீது இளம்பெண் குற்றம்சாட்டிய விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்பாவி எனில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments